Monday, May 26, 2008

வந்ததே கார் வந்ததே

நான் ரொம்ப நாளா ஆசைப்பட்ட ஒரு விஷயம் இந்த சனிக்கிழமை நடந்துச்சு. நான் மாருதி swift கார் வாங்கிட்டேன்.மீ த ஹாப்பி :-)

என்னோட முதல் ஆசை சைக்கிள் தான். நான் ரொம்ப லேட்டா தான் சைக்கிள் ஓட்ட கத்துக்கிட்டேன். சரி ஒரு சைக்கிள் வாங்கி கேக்கலாம்னு நான் கேட்டது Hercules rockshox. அப்பாகிட்ட இந்த சைக்கிள் வாங்கி குடுக்க சொன்னா அவர் வாங்கி தந்தது Hercules Captain. முதல்ல அந்த சைக்கிள் மேல எனக்கு பயங்கர எரிச்சல். என்னடா இது நம்ம கேட்ட சைக்கிள் கிடைக்கலேன்னு..கொஞ்ச நாள்ல அந்த கோபம் எல்லாம் போச்சு. நானும் என் சைக்கிள் பிரிக்க முடியாத நண்பர்கள் ஆயிட்டோம் அந்த சின்ன ஊர்ல நம்ம சைக்கிள் டயர் படாத தெருவே இருக்காது.நான் பத்தாவது பரீட்சை முடிச்சிட்டு வரும் போது வீட்டுக்கு வந்தப்ப தான் இந்த பரிட்சைல ஒரு சின்ன தப்பால நூறு மார்க் வராதுன்னு தெரிஞ்சது, அப்ப வந்த கோபத்துல என் சைக்கிள் செயின் கார்ட்ல எட்டி ஒரு உதை உதைசேன். அதை பார்க்கும் போது எல்லாம் சைக்கிள் மேல கோபம் காட்டின என்னோட மடத்தனம் எனக்கு உறைக்கும்.




கொஞ்ச நாள் கழிச்சு நான் பிளஸ் ஒன் போனப்ப எங்க வீட்ல எனக்கு ஒரு டீ.வீ.எஸ்வாங்கி குடுத்தாங்க . நான் ரொம்ப சந்தோஷ பட்டேன். நான் கேட்காம வாங்கி குடுத்து என்ன அதிர்ச்சி படுத்திட்டாங்க. என்னோட சைக்கிள் பிரியா விடை குடுத்துட்டேன் . வண்டி வந்ததுக்கு அப்புறம் என்னோட எல்லைகள் இன்னும் பெரிசாச்சு, தூரத்துல இருந்த பசங்க வீட்டுக்கு எல்லாம் போனேன். அப்படி கிடச்சவன் தான் இப்பவும் என்னோட பெஸ்ட் நண்பன். சோ என்னோட வண்டிக்கு ரொம்ப நன்றி. நான் காலேஜ் வந்ததுக்கு அப்புறம் அந்த வண்டிய வித்துடாங்க. ஊருக்கு போனா ஏதோ ஒன்னு மிஸ் ஆகிற மாதிரி இருக்கும். இப்ப அந்த வண்டி எங்க இருக்குதோ?


வேலை கிடச்சவுடனே ஒரு பைக் வாங்கலாம்னு நினைச்சேன். இத வீட்ல சொன்னவுடனே எல்லாரும் ஒரே மாதிரி வேணாம்னு சொல்லிடாங்க. எனக்கு ஆதரவா யாரும் இல்லை. அதனால இந்த வண்டி வாங்கற ஐடியா சரிப்பட்டு வரல. வேலைக்கு சேர்ந்து ரெண்டு வருஷம் ஆனதுக்கு அப்புறம் மறுபடியும் இந்த பேச்ச எடுத்தேன். நீ தான் வெளிநாடு போறேன்னு சொல்றியே இப்ப எதுக்கு பைக் அப்படின்னு சொல்லி இந்த தடவையும் ஆப்பு வச்சிட்டாங்க.


அமெரிக்கால இருந்து வந்தவுடனே கார் வாங்கலாம்னு நினைச்சேன். ஆனா அப்பா முதல்ல வீடு வாங்கு அதுக்கு அப்புறம் கார் வாங்குன்னு சொல்லிட்டாங்க . அதனால வீடு வாங்கியாச்சு. கைல இருந்த காசு எல்லாம் அதுலயே செலவு செஞ்சாச்சு. ஒரு வருஷம் கழிச்சு இப்ப வாங்கியாச்சு நம்ம கார். இது என் கார்னு சொல்ல கூடாதுன்னு என்னோட நண்பர்கள் எல்லாம் சொல்லிட்டாங்க. சோ இது நம்ம கார்.







Wednesday, May 07, 2008

வாழ்த்துக்கள்

ஒருத்தன் எப்ப பார்த்தாலும் காதல் தரிசனம் தேவதை ஒற்றை பார்வை சூரியன் சந்திரன் வானவில் பாவனா இப்படின்னு எல்லாம் எழுதிட்டு இருப்பானே அவனை கொஞ்ச நாளா காணோமே ஒரு வேளை வேளையில தான் பிசியா இருப்போனு நினைச்சேன்.

ஆனா அந்த நல்லவரு வல்லவரு நாலும் தெரிஞ்சவரு நம்ம பில்லு பரணி கல்யாண வேலைகள்ல தான் பிசியா இருக்காருன்னு இப்ப தான் தெரிஞ்சது ..

நான் பொதுவா யாரையும் பார்த்து அட்மைர்பண்ண மாட்டேன்.. ஆனா நம்ம பில்லு பரணி அநியாயத்துக்கு நல்ல பையன் .இப்படி பட்ட ஒரு நல்ல பையன் கிடைக்கறதுக்கு அவங்க குடுத்து வச்சிருக்கணும் .

நைஸ் பாய்ஸ் கெட் நைஸ் கேர்ள்ஸ் அப்படிங்கற பழமொழிக்கு ஏத்த மாதிரி (அதான் காக்க காக்க படம் வந்து நாலு வருஷம் ஆச்சே..இது பழமொழி தான்) அவங்களும் இவன் அளவுக்கு நல்லவங்களா இருப்பாங்கனு நினைக்கறேன்.
நீங்க ரெண்டு பேரும் ஒரு பல்கலைக்கழகமா (அதாம்பா நல்லதொரு குடும்பமா ) வாழனும்னு எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கறேன்.