பையா - ஒரு அடை அவியல் பார்சல்
இந்த மாதிரி இன்னும் ரெண்டு படம் நடிச்சா பருத்தி வீரன் கார்த்தி வீட்ல உக்காந்து பருத்தி பால் சாப்பிட வேண்டியது தான். அந்த பருத்தி பால் விக்கறவர் லிங்குசாமியா இருப்பார்.
நல்ல அருமையான கதைக்களம். நல்லா எடுத்துருக்க வேண்டிய படம். இவ்ளோ சொத்தையா எடுக்காம இருந்திருக்கலாம். ஹீரோவோட அறிமுக காட்சி ஒரு படத்துல வடிவேலுவோட அறிமுக காட்சி மாதிரி இருந்துச்சு.தமன்னா ஏசியன் பெய்ன்ட் விளம்பரம் மாதிரி படம் முழுக்க வர்ற மாதிரி இருக்கு. மொத்த படத்துல பத்து சீன் நல்லா இருக்கும் அவ்ளோ தான். கார்த்தியோட டிரெஸ்ஸிங் நல்லா இருக்கு படத்துல,குடுத்த காசுக்கு நடிச்சிருக்கார்.இந்த படத்துக்கு மிலிந்த் சோமன் தேவையே இல்லை.
இந்த படத்தோட trailer காமிக்கும் போது டைரக்டர் எடுத்த ஜி படம் பேரு போடல. டைரக்டர் அடுத்த படம் எடுத்தா இந்த படம் பேரு போடமாட்டார். கதை இல்லாதது கூட பெரிய விஷயம் இல்ல இப்ப வர்ற நெறைய படத்துல கதை இல்ல.ஆனா இரும்பால ஹீரோவ அடிக்கும் போது டங் டங் அப்படின்னு சத்தம் மட்டும் கேட்குது, ஹீரோ மேல இருந்து ரெண்டு சொட்டு ரத்தம் மட்டும் வருது. அதுக்கு அப்புறம் ஹீரோ இன்னும் ஒரு ரெண்டு பேர அடிக்கறார்.இந்த மாதிரி சீன் வரும் போது தான் எல்லாரும் கை தட்டி சிரிக்கறாங்க. இந்த படத்துல வர சண்டை காட்சிகள் ராஜ்கிரண் படத்தோட சண்டை தான் கண்ணு முன்னாடி வருது.இந்த மாதிரி எல்லாம் சண்டை போட ஏற்கனவே நெறைய பேரு இருக்கறாங்க. கார்த்தியும் அந்த லிஸ்ட்ல சேராம இருக்கணும்.
லிங்குசாமி இது வரைக்கும் யாருமே பண்ணாதே புதுமை இந்த படத்துல செஞ்சு இருக்கார்.
அவரு படத்த அவரே காப்பி அடிச்சிருக்கார்.ஹீரோவ தொரத்திட்டு வரும் போது ஒரு வெட்ட வெளிக்கு கூட்டிட்டு போய் சண்டை போடறது ரன்,வேற ஒரு ஊருக்கு போய் அங்க இருக்கற தாதா பத்தி ஒண்ணுமே தெரியாம சண்டை போடறது சண்டைகோழி. ஹீரோவ ஒரு கும்பல் தொரத்த கதாநாயகிய இன்னொரு கும்பல் துரத்துறது "படிக்காதவன்" " மலைகோட்டை" ரெண்டு படத்துலயும் வந்த கான்செப்ட் தான். அமுதன் ஸ்பூப் எடுத்தா லிங்கு அதையே நெறைய படத்துல இருந்து சீரியஸ் காப்பி அடிச்சிருக்கார்.
என்னோட ரூம் மேட் சம்பள உயர்வுக்காக ட்ரீட்டா கூட்டிட்டு போனான். இந்த படத்த அவன் மறக்க மாட்டான்.அட்லீஸ்ட் சரவண பவன் சாம்பார் இட்லி, ரவா மசாலா தோசை, ஆனியன் உத்தப்பம் இது எல்லமாவது நல்லா இருந்துச்சு :-)சாப்பிட முடியாம ஒரு அடை அவியல் பார்சல் பன்னி வீட்டுக்கு எடுத்துட்டு வந்தாச்சு. அப்பாடா தலைப்புக்கு வந்தாச்சு.
தமிழ் சினிமா ரசிகர்களோட ரசனை மாறிடிச்சு, படம் எடுக்கறவங்க தயவு செஞ்சு கொஞ்சம் யோசிங்க.