அசோசியேட் லைப் மேனஜ்மேன்ட் இன்ஸ்டியுட்(ALMI)
கஷ்ட பட்டு(?)படிச்சு ஒரு அஞ்சு பேப்பர் ஆன்லைன் எக்ஸாம் எழுதி நான் வாங்கின பட்டம் தான் இது. லைப் இன்சூரன்ஸ் பத்தி லோமா(LOMA) அப்படிங்கற இன்ஸ்டிடியுட் இந்த பட்டத்த குடுக்கறாங்க.
பிரெண்ட்ஸ் எல்லாம் வேற ஊருக்கு போய்டாங்க. சென்னைல ஊர் சுத்த முடியல. ரொம்ப போர் அடிச்சதால இந்த விபரீத முடிவு எடுத்து படிக்க ஆரம்பிச்சேன்.கொஞ்சம் interestinga இருந்தது.அதனால தொடர்ந்து படிச்சு ஆறு மாசத்துல நாலு பேப்பர் எழுதினேன். இதுக்கு முன்னாடி இருந்த கம்பெனில ஒரு எக்ஸாம் முடிச்சுருந்தேன். அஞ்சு பேப்பர் கம்ப்ளீட் செஞ்சதனால் மேற்கூறிய பட்டத்த குடுத்துடாங்க.ஒரு எக்ஸாம் படிக்க ரெண்டு வாரமே போதும். ஆனா வழக்கம் போல நாளைக்கு படிக்கலாம் நாளைக்கு படிக்கலாம் அப்படின்னு தள்ளி போட்டு ஒரு எக்ஸாம் கிட்ட தட்ட ரெண்டு மாசம் ஆயிடுச்சு.
யாராவது mgnithi உங்க பேரு ALMI நீங்க படிச்சு வாங்கின பட்டமா அப்படின்னு கேட்டா ஆமான்னு சொல்லலாம். :-)