கைப்புள்ள -இன் லேட்டஸ்ட் ரொமான்ஸ்..
மல்லாக்க படுத்து விட்டத்த பார்க்காம எல்.சி.டி டீ. வி பார்த்து கிட்டு இருக்கிறார். கைப்புள்ள.. அதில்.. சுட்டும் விழி சுடரே .. பாட்டு ஓடிக் கொண்டு இருக்கிறது...
தீடிரென தலைக்கு மேலே பல்பு எரிகிறது.. வெளியில் பால் கோவா வண்டிக்காரன் மணி அடித்து கொண்டு போகிறான்...
டேய் ஜெய்சுக்கு... உடனே வாடா... உனக்கு அண்ணி கிடச்சுட்டா.
என்ன அண்ணே சொல்றீங்க. என்றபடி ஆச்சர்யத்துடன் வருகிறார் ஜெய் சுக்கு..
இன்னையில இருந்து உனக்கு அசின் தான்டா அண்ணி..இப்பவே எழுதறேன்டா கவிதை..
காதல் கவிதை எழுத ஆரம்பிக்ககிறார் கைப்புள்ள...
வாள் வீச்சிலும் வேல் வீச்சிலும்
சில நேரங்களில் கல் வீச்சிலும்
தப்பி வந்தது உன் விழி வீச்சில்
செத்து மடிவதற்கா?
அண்ணே ஓப்பனிங்கே சூப்பர் ....
ஊர் ஒன்று கூடி அடித்தாலும்
வலிக்காதது போல் நடிப்பவன்
நீ செல்லமாய் கன்னத்தில்
தட்டிய போது தரையில் விழுந்தேன்
அண்ணே நம்ம அடி வாங்கறத வச்சே முத ரெண்டு பிட்ட போட்டீங்க.. பட்டைய கிளப்புங்க...
ஊருக்குள் மீதி தெருக்களில் எல்லாம்
கரும் சிறுத்தையாய் வலம் வருபவன்
உன் வீட்டு தெருக்களில் மட்டும்
அழகிய கருப்பு பூனைக்குட்டியாய்..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
.
ஊருக்கெல்லாம் இளைத்தவன் இந்த கைப்புள்ள
உன் கை பட்டா
நான்ஆகிறேன் பச்ச புள்ள
அது ஏன் புள்ள?
அண்ணே .. முடியல. இந்த சீன்ல எங்கேயோ போய்டீங்க...
என் கூட நடித்த மற்றவர்கள்
எல்லாம் வெறும் .............
நீ என்னை ஏற்றுக் கொள்வாயா
மலபார் அழகி ..........
அசினுக்கு தானே கவிதை எழுதறீங்க அது என்ன .......
டேய் மூதேவி.. மழைக்காவது ஐ.டி கம்பனி பக்கம் போய் இருக்கியா நீ.. இதுக்கு பேரு தான் டெம்ப்லேட்... ஒரு வேளை அசின் ரிஜெக்ட் பண்ணிட்டா அதே கேப்ல நயன் தாரா, பாவனா , காவ்யா இவங்க பேரு எல்லாம் போட்டு அவங்க கிட்ட ஒரு பிட்ட போடலாம்..
ஆம் என்று சொன்னால்
உன் அப்பனுக்கு ஆவேன் மாப்பு
இல்லை என்றால் அது தான்
நான் வாங்கியதிலேயே பெரிய ஆப்பு...
தல பினிஷிங் டச்.. ரொம்ப கலக்கல் தல...
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்ப்ப்பா... இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியேகொல்றாங்களே... இன்னைக்கு என்ன நடக்க போகுதோ.
டேய் ஜெய் சுக்கு எடுரா வண்டிய...
ஜெய் சுக்கு ஓடிப் போய் ட்ரை சைக்கிளை எடுத்து வருகிறார்.
பக்கீ. பக்கீ .. .இந்த வண்டில போன நம்மள அசின் வீட்டு நாய் கூட திரும்பி பார்க்காது.. எடுறா நம்ம பெர்ஸிடிஸ் மென்ஸ...
அண்ணே.. அது மெர்ஸிடிஸ் பென்ஸ்..
ஏதோ ஒன்னு .. அத எடுறா...
அசின் வீட்டுக்கு வண்டி செல்கிறது.. அசினிடம் கவிதைய குடுத்து விட்டு கால் நடுங்க நிற்கிறார் கைப்புள்ள..
அதை பாத்தவுடன் அசின் டென்ஷனாகி போன் எடுத்து கால் செய்கிறார்..
யாருக்கு போன் பண்றீங்க...
.
கேப்டனுக்கு.....
நம்ம தோனி பயலுக்கா... அவனும் நம்மள மாதிரி ஆயிட்டான் இப்ப.. ஆஸ்திரேலியா டீம் எவ்ளோ அடிச்சாலும் சிரிக்கிறான்.. ஐ லைக் ஹிம்...
நான் சொல்றது கேப்டன் விஜயகாந்துக்கு ...
மாப்பு வெச்சிட்டாயா ஆப்பு என்று அலறியபடி எஸகேப் ஆகின்றனர் கைப்புள்ளயும் ஜெய் சுக்குவும்.....