முரண்பாடுகள்
தமி்ழ் தான் என் மூச்சு
தமி்ழ் தான் என் பேச்சு
இது அரசியல்வாதி அப்பா
டாட்.. வேர் இஸ் மை வாட்ச்?
இது அவர் மகன்.
அரசின் வனத்துறைக்கு சொந்தமான
இடம் பசுமையாய் இருந்தது
ஆச்சர்யமாய் எட்டிப் பார்த்தேன்
முட்காடுகள்...
இரண்டு மனைவிகள் பத்து குழந்தைகள்
ஐந்து கொலைகள் சில பல
கடத்தல்கள் கொலை வெறி சபதங்கள்
இவற்றின் நடுவே குடும்பத்தில் எப்படி
ஒற்றுமையாய் இருப்பது என்று
சொன்னார்கள் .. மெகா சீரியலில்..
அழும் குழந்தைக்கு பால்
வாங்கி கொடுக்க காசு
இல்லாமல் விரக்தியில்
அழுதாள் ரசிகனின் மனைவி
தன் கணவன் கட் அவுட்டுக்கு
பால் அபிஷேகம் செய்வதை
பார்த்து ஆனந்த கண்ணீர்
விட்டாள் நடிகனின் மனைவி...
vithi yaari vituthu... comeback traila ellarum kavithai ezhutharaanga. naanum antha ideava G3 panni intha posta pottuten..