Ten things to kill time when you are in U.S
நான் இந்தியாவுக்கு போக போறேன்.நினைச்சாலே ரொம்ப சந்தோஷமா இருக்கு.
இந்த ஒரு வருஷம் நாலு மாசமா நான் நிறைய நேரம் என் நண்பர்கள்/நண்பிகள் கூட தான் இருந்தேன். ஒரு வருஷ காலம் போனதே தெரியலை. நல்லா ஊர் சுத்தி பார்த்தாச்சு..
இதை பொது மக்கள் நம்புறதுக்காக போட்டோவும் புடிச்சாச்சு..
இருந்தாலும் எத்தனை நாள் தான் வேலை பார்க்கற மாதிரி நடிக்கறது :-)
அதனால நான் என்னோட ப்ராஜெக்ட் லீட் கிட்ட ஊருக்கு போறேன்னு ஒத்தக்கால நின்னு பெர்மிசன் வாங்கிட்டேன்.
கும்பலா இருந்தா நமக்கு பொழுது போக்குக்கு பஞ்சமே இருக்காது. ஆனா தனியா இருந்தா
நம்மளோட ஒரே தோழன் நம்ம லேப்டாப்பு தான். அது இல்லைனா நான் அவ்ளோ தான்.
நான் வெட்டியா வீட்ல இருக்கறப்ப எப்படி பொழுது போக்கினேனு சொல்றேன்.
1. தினமலர்.காம்ல(dinamalar.com) போய் டெய்லி தமிழ் நாட்ல என்ன நடக்குதுனு படிப்பேன்.
2. ப்ளாக் ஸ்பாட்ல போய் ப்ளாக் படிப்பேன். அந்த ப்ளாக் எழுதுறவங்களோட BLOGS I READ ல இருந்து எதாவது ஒரு ப்ளாக் செலெக்ட் பண்ணி அதை படிப்பேன்.
3. behindwoods.com, indiaglitz.com சைட்ல போய் சினிமா செய்தி படிச்சு பொது அறிவ வள்ர்த்துக்குவேன். Raaga.com ல போய் பாட்டு கேட்பேன். அதுல playlist create பண்ணி situation ஏத்த மாதிரி பாட்டு கேட்பேன்.
4. இருக்கவே இருக்கு நம்ம ஆர்குட். அதுக்குள்ள போய்ட்டா அது ஒரு தனி உலகம். டைம்
போறதே தெரியாது.
5. youtube.com சைட்ல போய் அதுல தமிழ், தெலுங்கு இப்படி எல்லாம் செர்ச் பண்ணி அதுல இருக்கற வீடீயோஸ் பார்ப்பேன்.
6. loosu.com சைட்ல போய் படம் பார்ப்பேன்.இப்படி ஒரு பேர வச்சிருக்கரது கரெக்ட் தான்.
சில படம் பார்த்ததுக்கப்புறம், இந்த படத்த பார்த்த நம்ம லூசா இல்ல படத்துல நடிச்சவங்க, டைரக்ட் பண்ண அவங்க லூசானு சந்தேகமா இருக்கும்.சில சமயம் எதாவது அட்வர்டேஸ்மெண்ட் மட்டும் போட்டு நம்மள லூசு ஆக்கிடுவாங்க.
7. வருத்தபடாத வாலிபர் சங்கம் (http://vavaasangam.blogspot.com)
இருக்கறப்ப நம்ம டைம் பாஸ் ரொம்ப ஈசி.. அங்க கைப்புள்ள
படற பாட்டை பார்த்தா கல்லும் கறைஞ்சிடும்.
8. எதாவது ஒரு மேட்ரிமோனியல் சைட்டுக்கு போனா ரொம்ப காமெடியா இருக்கும். அதுல அவங்க அவங்க தங்களை பத்தி சொல்லி இருக்கறத படிச்சா போதும். அத விட காமெடி எங்கயும் புடிக்க முடியாது.
9. cricinfo (http://www.cricinfo.com)ல போய் bangladesh vs kenya, lancs vs kent, baroda vs railways இப்படி எல்லா ஸ்கோர் கார்டும் பார்த்துட்டு அதுல இருக்கற எல்லா ஆர்டிக்கலயும் படிப்பேன்.
10.kumudam.com( http://kumudam.com)ல போய் குமுதம், ரிப்போர்ட்ட்ர் எல்லா வாரமும் மறக்காம படிப்பேன்.
இது எல்லாத்தயும் தாண்டி போர் அடிச்சா ஆபிஸ் போய்டுவேன் :-)
இந்தியா போனதுக்கு அப்புறமா இந்த லிஸ்ட் குறைஞ்சிடும்னு நினைக்கிறேன்.. பார்க்கலாம்.